அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் எதிர்ப்பு குரல் கிளம்பி உள்ளதோடு, இதற்கு எதிரான போராட்டங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அதானி பெயர் கொண்ட கன்டெயினர் ரெயில் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் தகவல்களில் ரெயில்வே பெயர் அதானி ரயில்வே என மாற்றப்பட்டுவிட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில் அவற்றில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இந்திய ரயில்வேயின் பெயர் மாற்றப்படவோ, ரயில்கள் எதுவும் அதானி குழுமத்திற்கோ விற்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
கன்டெயினர் ரெயில்களை நாடு முழுவதிலும் இயக்குவதற்கான உரிமத்தை அதானி குழுமம் 2006 ஆம் ஆண்டு முதல் வைத்து இருக்கிறது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.






