சாலமன் தீவுகளின் தலைநகரான ஹோனியாராவில் நேற்று கிளர்ச்சியாளர்களால் கட்டடங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த பிரதேசத்தில் அடர்ந்த கரும் புகை மூட்டம் அதிகமாக காணப்படுவதாக அந்த நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
அரசாங்கத்தின் ஊரடங்கு உத்தரவையும் மீறி, அந்த நாட்டு பிரதமரை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தலைநகர் ஹொனியாரா வீதிகளில் இறங்கியுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.






