சுவீடனின் முதல் பெண் பிரதமராக தேர்வுசெய்யப்பட்டு, சில மணிநேரங்களிலேயே தனது பதவியை இராஜினாமா செய்த மக்டலினா ஆண்டர்சன் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுவீடன் பாராளுமன்றில் திங்களன்று நடைபெற்ற மற்றொரு வாக்கெடுப்பு அவருக்கு மீண்டும் பிரதமர் பதவியே பெற்றுத் தந்தது.
சுவீடன் பாராளுமன்றில் திங்களன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் அண்டர்சன் மிகக் குறைந்த வாக்குகளினால் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
173 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்தனர், மேலும் இருவர் அவருக்கு எதிராக வாக்களித்திருதால் அவர் இந்த உயர் பதவியை இழந்திருப்பார்.
எவ்வாறெனினும் ஆறு நாட்களில் இரண்டாவது முறையாக மக்டலினா ஆண்டர்சன் சுவீடன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.






