கொரோனா நான்காவது அலையைத் தடுப்பதில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை பொது இடங்களில் விலக்கி வைக்க அந்நாட்டு தேசிய, மாகாண தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பதவி காலத்தை முடிக்க உள்ள அதிபர் ஏங்கலா மார்க்கெல், இந்த தொலைநோக்கு நடவடிக்கைகளை “தேச நலனுக்கான” செயல் என்று விளக்கியுள்ளார்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அல்லது கொரோனா தொற்றிலிருந்து அண்மையில் மீண்டவர்கள் மட்டுமே உணவகங்கள், திரையரங்குகள், ஓய்வு விடுதிகள் வணிக வளாகங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். “பிப்ரவரி மாதத்திற்குள் தடுப்பூசிகள் கட்டாயமாக்கப்படலாம்,” என்றும் ஆட்சித் தலைவர் கூறினார். ஜெர்மனியில் ஏற்பட்ட கொரோனா அலைகளிலேயே 4வது அலை கடுமையானதாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 388 பேர் இறந்துள்ளனர். ஒமிக்ரான் திரிபின் பரவல் குறித்த கவலையும் அதிகரித்து வருகிறது, அடுத்த சில மாதங்களில் கொரோனா தொற்றாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இத்திரிபால் பாதிக்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துளனர். “சூழலைக் கருத்தில் கொண்டு, கட்டாய தடுப்பூசியை ஏற்றுக்கொள்வதே சரியாக இருக்கும்.” என அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் இது நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டார்.






