தென்னாப்பிரிக்காவில் புதிதாக கண்டறிப்பட்டுள்ள ஓமிக்ரோன் வைரஸ் தொற்று தற்போது பிரித்தானியாவில் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று திடீரென நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதேவேளை பிரித்தானியாவில் கடந்த ஒரே நாளில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் 24 மணிநேரத்தில் 1இலட்சத்து 6 ஆயிரத்து 122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு 140 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் இதுவரை மொத்தமாக 1 கோடியே 16 இலட்சத்து 47 ஆயிரத்து 473 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதோடு 1இலட்சத்து 47 ஆயிரத்து 573 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை கொரோனா வைரஸ் பொருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு 15 இலட்சத்து 77 ஆயிரத்து 420 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை 849 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 49,382 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 99 இலட்சத்து 22 ஆயிரத்து 480 பேர் குணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,






