பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு விசேட உரையாற்றுகிறார்.
இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் இன்று மாலை 6 மணிக்கு மக்களிடம் முக்கியமான விடயம் குறித்து பகிர்ந்துகொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இந்த தொற்று காரணமாக இதுவரையில் 75 இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 236 பேர் இந்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் கருத்துக்களை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய – சீன மோதல் குறித்தும் இதன்போது பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.






