உக்ரைன் தலைநகரில் சிறப்பு இராணுவத்தை களமிறக்க இருப்பதாக அமெரிக்க உள்விவகாரத்துறை அமைச்சகம் மற்றும் பென்டகன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரியில் ரஷ்ய துருப்புக்கள் உக்ரைன் மீது படையெடுத்த பிறகு முதல் முறையாக அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தவே சிறப்பு இராணுவத்தை களமிறக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், குறித்த திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஜோ பைடனிடம் இதுவரை அதிகாரிகள் தரப்பு தகவல் தெரிவிக்கவில்லை எனவும், அவரது முடிவே இறுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இக்கட்டான நிலையில் உக்ரைனில் சிறப்பு இராணுவத்தை களமிறக்குவதால் ஏற்படும் விளைவுகள் தொடர்பிலும் ஆய்வு முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிரது.
இருப்பினும் ரஷ்ய ஏவுகணைகளின் எல்லைக்குள் இருக்கும் தூதரகத்தின் பாதுகாப்புக்காக மட்டுமே துருப்புக்கள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
உக்ரைன் தலைநகரில் மூன்று மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்ட அமெரிக்க தூதரகமானது தற்போது முழுவீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில், புதிய தூதராக Bridget Brink என்ற பெண்மணியை அமெரிக்கா நியமிக்கும் என்றே தெரிய வந்துள்ளது.






