உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணம் முழுவதுமாக ரஷ்ய படைகளிடம் வீழ்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் திகதி போர் தொடுத்தது. போர் தொடங்கி 4 மாதங்களை கடந்த பின்னரும் போரின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.
இந்த போரில் தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதை முக்கிய இலக்காக கொண்டு ரஷிய படைகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தில் பெரும்பாலான நகரங்கள் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழலில், உக்ரைன் படைகளின் வசம் இருக்கும் நகரங்களை கைப்பற்ற ரஷ்ய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன.
முழுவதுமாக ரஷ்ய படைகளிடம் வீழ்ந்தது! ஒண்ணு கூட மிஞ்சவில்லை… முக்கிய அறிவிப்பு | Ukraine Luhansk Fully Captured By Russia
அந்த வகையில் டான்பாஸ் பிராந்தியத்தின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் அரசு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த செவெரோடொனட்ஸ்க் மற்றும் லிசிசான்ஸ்க் ஆகிய இரு நகரங்களையும் அண்மையில் ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது.
இதன் மூலம் ஒரு பகுதி கூட மிஞ்சாமல் லுஹான்ஸ்க் மாகாணத்தை முழுவதுமாக ரஷ்ய கைப்பற்றியுள்ளது.
இந்த தகவலை விளாடிமிர் புடினும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முழுவதுமாக ரஷ்ய படைகளிடம் வீழ்ந்தது! ஒண்ணு கூட மிஞ்சவில்லை… முக்கிய அறிவிப்பு | Ukraine Luhansk Fully Captured By Russia






