கள்ளக்குறிச்சி சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார் அரசியல் பெரும்புள்ளிகளுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி கடந்த 13 ஆம் தேதி இரவு மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் தெரிவித்து வந்தனர். இதற்கு நியாயம் கேட்டு மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் மற்றொரு முகம்! அரசியல் பெரும்புள்ளிகளுடன் பள்ளி தாளாளர் எடுத்த புகைப்படங்கள் | Kallakurichi Student Death School Owner
இந்த நிலையில் பள்ளியின் தாளாளர் சக்தி ரவிக்குமார் பாஜகவின் தமிழ் வளர்ச்சிக்குழுவின் முன்னாள் மாநில அமைப்பாளராக இருந்துள்ளதாவும், எச்.ராஜா நடத்தி வரும் இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கத்தில் அவர் பங்கேற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எச்.ராஜாவுடன் மேடையில் அவர் நிற்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
அதே போல சக்தி ரவிக்குமார் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னர் சந்தித்த புகைப்படமும், டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்த புகைப்படமும் வைரலாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் மற்றொரு முகம்! அரசியல் பெரும்புள்ளிகளுடன் பள்ளி தாளாளர் எடுத்த புகைப்படங்கள் | Kallakurichi Student Death School Owner
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் மற்றொரு முகம்! அரசியல் பெரும்புள்ளிகளுடன் பள்ளி தாளாளர் எடுத்த புகைப்படங்கள் | Kallakurichi Student Death School Owner
அதேபோல், இந்த சக்தி இண்டெர்நேஷனல் பள்ளியில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்று உள்ளது அப்போதே ஊடகங்களிலும் செய்தியாகி இருப்பது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் மற்றொரு முகம்! அரசியல் பெரும்புள்ளிகளுடன் பள்ளி தாளாளர் எடுத்த புகைப்படங்கள் | Kallakurichi Student Death School Owner