கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி இறப்பதற்கு முந்தைய நாள் படிப்பு அறையில் இருந்து வெளியே வந்ததாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவி ஸ்ரீமதியின் மர்ம மரணம் தொடர்பான விவகாரத்தில், படிக்கும் அறையில் இருந்து அவர் வெளியே வந்ததாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த காட்சிகள் அந்த பள்ளியில் தான் எடுக்கப்பட்டதா? அப்படி இருந்தால் மாணவி இறந்தது முதல் நாள் இரவா? அல்லது காலையிலா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஊடகங்களில் வெளியாகியுள்ள அந்த சிசிடிவி காட்சிகளில், இரவு 9.30 மணிக்கு மாணவி பள்ளி வளாகத்தில் நடந்து செல்கிறார். அவரது கையில் கடிதம் இருப்பதாக தெரிகிறது.
அதே போல் மற்றோரு வீடியோவும் வெளியாகியுள்ளது. அதில் மாணவி வகுப்பறையில் சோர்வுடன் வந்து மேசை மீது படுத்துக்கொள்கிறார். தற்போது இந்த காட்சிகள் பரபரப்பை அதிகரித்துள்ளன.
இந்த காட்சிகளை பள்ளி தரப்பில் இருந்து வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், மூன்றாவது மாடியில் சிசிடிவி பொருத்தப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதால் குழப்பம் நீடிக்கிறது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு முன் பதிவான சிசிடிவி காட்சிகள்! | Kallakurichchi Srimathi Cctv Footage Release
dtnext.in






