உக்ரைனின் தானிய ஏற்றுமதியை கொண்டாடுவது என்பது மிக விரைவான செயல் என்று அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையால் உணவு தானிய உற்பத்தியில் மிக முக்கிய நாடான உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட வேண்டி இருந்த பல மில்லியன் டன் உணவு தானியங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனால் உலகளவில் கடுமையான தானிய தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் பொருள்களின் விலையேற்றமும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்தது.
இந்தநிலையில் உக்ரைன், ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நேற்று கருங்கடலில் முக்கிய துறைமுகமான ஒடாசா துறைமுகத்தில் இருந்து சுமார் 26,000 டன் மக்காச்சோள பொருள்களை ஏற்றிக்கொண்டு சரக்கு கப்பல் வெளியேறியது.
இந்த நடவடிக்கை உலகநாடுகள் மத்தியில் அதிக கவனம் பெற்ற நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ள தகவலில், தானிய ஏற்றுமதியை கொண்டாடுவது என்பது மிகவும் விரைவான செயல் என்று தெரிவித்தார்.
உணவு தானிய ஏற்றுமதி… கொண்டாட்டங்கள் மிக விரைவானது: ஜெலென்ஸ்கி கருத்து! | Zelensky Say Too Early To Celebrate Grain Shipment
கூடுதல் செய்திகளுக்கு: ”நீதி வழங்கப்பட்டுள்ளது”…அல்கொய்தா தலைவரை கொன்று பழிதீர்த்த அமெரிக்கா: ஜோ பைடன் உரை!
மேலும் ஒப்பந்தம் எவ்வாறு தொடர்ந்து கடைப்பிடிக்கபடுகிறது, தானியங்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுகிறது என்பதை கொண்டு பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.






