ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பு மருந்து சிறப்பாக செயற்படுவதாக வைரலாகி மருத்துவரும், ஆய்வாளருமான டேவிட் தகவல் தெரிவித்துள்ளார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம் மற்றும் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, பல்வேறு நாடுகளில் கிளினிக்கல் பரிசோதனையை மனிதர்களுக்கு முன்னெடுத்து வருகின்றன.
இதில் மூன்றாம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் மூன்றகட்ட மருத்துவ பரிசோதனைகள் அனைவரும் எதிர்பார்த்தப்படி நல்ல செய்தியாகவே உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து வைரலாஜி மருத்துவரும், ஆய்வாளருமான டேவிட் கூறுகையில், ‘இது ஒரு முக்கியமான ஆய்வாகும், ஏனெனில் இந்த தடுப்பூசிக்கு அடிப்படையான மரபணு வழிமுறைகள், பாதுகாப்பாகவும் முடிந்தவரை விரைவாக உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
அவை மனித உடலில் செலுத்தும்போது அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாம் எதிர்பார்த்தப்படி தடுப்பு மருந்து செயற்படுகிறது. இது நல்ல செய்தி’ என கூறினார்.






