ராயல் மரைன்களின் கேப்டன் ஜெனரல் என்ற பதவியில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளார்.
சசெக்ஸின் சுயசரிதை விவரங்கள் வெளியிடப்பட்ட மறுநாளே, இளவரசர் ஹரியும் கெளரவ ராணுவ பொறுப்பை ராஜா கையகப்படுத்தினார்.
இளவரசர் ஹரியிடம் இருந்த பறிக்கப்பட்ட ராயல் மரைன்களின் கேப்டன் ஜெனரல் என்ற பதவியில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளார்.
சசெக்ஸ் இளவரசரான ஹரி மற்றும் இளவரசியான மேகன் இருவரும் மூத்த அரச குடும்பத்தில் இருந்து விலகிய பிறகு, 2021 பிப்ரவரியில் கமோடார்-இன்-சீஃப் ஆஃப் ஷிப்ஸ் அண்ட் டைவிங் மற்றும் RAF ஹானிங்டனின் கெளரவ விமான தளபதி ஆகிய பட்டங்கள் இளவரசர் ஹரியிடம் இருந்து பறிக்கப்பட்டது.
தற்போது இளவரசி கேட் மிடில்டனுக்கு நாட்டின் ஆலோசகர் என்ற பதவி கிடைக்க இருக்கும் நிலையில், இளவரசர் ஹரியின் ராயல் மரைன்களின் கேப்டன் ஜெனரல் என்ற பதவி அரச குடும்பத்தின் எந்த உறுப்பினருக்கு அந்த பாத்திரம் வழங்கப்படும் என்பது பற்றிய யுகங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருந்தன.
இந்நிலையில் இளவரசர் ஹரி பதவி வகித்து வந்த ராயல் மரைன்களின் கேப்டன் ஜெனரல் என்ற பதவியில் மன்னர் மூன்றாம் சார்லஸ் பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
கார்ப்ஸ் ஆஃப் ராயல் மரைன்ஸின் 358 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மன்னர் மூன்றாம் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உங்கள் கேப்டன் ஜெனரலின் பாத்திரத்தை ஏற்றுக்கொள்வதில் மிகப்பெரிய மகிழ்ச்சி, கடந்த மூன்றரை நூற்றாண்டுகளில் எனது குடும்பத்தின் பல உறுப்பினர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதில் நான் விதிவிலக்காக பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.






