இலங்கையில் இரண்டாவது நபருக்கு மங்கிபொக்ஸ் (monkeypox) எனப்படும் குரங்கம்மை தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த நபருக்கே இந்த பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக டுபாயிலிருந்து நாடு திரும்பியிருந்த ஒருவர், மங்கிபொக்ஸ் தொற்றுடன் கடந்த 3 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார்.
இவர் குரங்கம்மையுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நபராவார்.
களனி பகுதியைச் சேர்ந்த 20 வயதான அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகிறார்.






