குவைத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக குவைத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்டு கொண்டு வரவும், உணவு, மருத்துவம், சுகாதாரமான தங்கும் வசதி ஆகியவற்றை செய்து கொடுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்று முக்கியமாக செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது மத்திய அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர், ‘குவைத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்டு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தூதரக ரீதியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குவைத் நாட்டுக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன’ என மேலும் கருத்து குறிப்பிட்டார்.
இதனையடுத்து நீதிபதிகள் ‘குவைத் நாட்டுக்குள் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கலாம். ஆனால்இ அங்கிருந்து வெளியேறி சொந்த நாட்டுக்கு திரும்ப விரும்பும் இந்தியர்களை மீட்பதில் என்ன சிக்கல் உள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.
அதனைத்தொடர்ந்து குவைத்தில் சிக்கியுள்ள தமிழக தொழிலாளர்களை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கினை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.






