இங்கிலாந்தில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 100,000 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்படைவதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
லண்டனின் இம்பீரியல் கல்லூரி நடத்திய ஆய்வில், தொற்றுநோயின் வேகம் துரிதமாகி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது ஒன்பது நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பாகி வருவதும் தெரியவந்துள்ளது.
நாங்கள் ஒரு முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும் ஏதாவது மாற வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
வசந்த காலத்தில் காணப்படும் தொற்றுநோய்களில் உச்சத்தை நெருங்கி வருகிறோம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்






