ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில் மருத்துவ முன்னணி நிறுவனம் ஒன்றும் கைகோர்த்துள்ளது.
ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் மருத்துவ உலகில் முன்னணி நிறுவனமான டொக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது.
கொரோனா தடுப்பூசி, மருத்துவ பரிசோதனைகள் குறித்து இந்த நிறுவனம் ஆலோசனை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக மத்திய உயிரி தொழில்நுட்பத்துறையுடனும், உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சிலுடனும் இணைந்து இந்த நிறுவனம் செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






