அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றிபெற்று ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
அத்துடன், ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பதவியேற்கவுள்ளார் முதல் கருப்பின மற்றும் தெற்காசிய பெண்மணியான கமலா ஹரிஸ். மேலும், அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதியாகவும் இவர் பெருமை பெறுகிறார்.
ஏற்கனவே, கமலா ஹரிஸ் கலிபோர்னியாவில் செனட்டராகப் பணியாற்றியிருந்தார் என்பதுடன் இவர் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த வெற்றி குறித்து அவர் ருவிற்றர் பதிவில் குறிப்பிடுகையில், “அமெரிக்கத் தேர்தல் அமெரிக்காவின் ஆன்மா மற்றும் அதற்காகப் போராடும் எங்கள் விருப்பம் பற்றியது” என கமலா ஹரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “எங்களுக்கு முன்னால் நிறைய வேலைகள் உள்ளன. தொடங்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.






