இணைய ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் முதற்கட்டமாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இணையத் தளங்களைக் கொண்டுவருவதற்கான உத்தரவை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இதன்படி, நெற்பிளிக்ஸ், சமூக ஊடகத் தளங்களான பேஸ்புக், ருவிற்றர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவையும் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படுகின்றன.
இதேவேளை, உள்ளூர் ஊடகங்கள் போல் இணைய ஊடகங்களின் ஒழுங்குமுறையை விவரிக்கும் சட்டத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றும் என இணைய சுதந்திர அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் அபர் குப்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மின்னணு ஊடகங்கள் 1995 ஆம் ஆண்டின் கேபிள் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒழுங்குமுறை சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டன.
எனினும், கடந்த காலத்தில் டிஜிட்டல் உள்ளடக்கத்தை மேற்பார்வையிட எந்த சட்டமும் அமைப்பும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.






