இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாடுவது கடினம் என திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த நிகழ்வைக் குறிக்கும் மற்றவர்களையும் முடக்கநிலை கட்டுப்பாடுகளில் இணைந்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
தொற்றுநோய் காரணமாக பிரித்தானியாவைச் சுற்றியுள்ள வெளிப்புற கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் நாடு தழுவிய முடக்கப்பட்ட நிலையில், பல உள்ளூராட்சி சபைகள் சனிக்கிழமை ஒன்லைன் தீபாவளி கொண்டாட்டங்களை வழங்குகின்றன.
தீபாவளி திருநாள், நாளை (சனிக்கிழமை) உலகெங்கிலும் மில்லியன் கணக்கான இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்களால் கொண்டாடப்படுகிறது.






