ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், அரசாங்கம் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு விளம்பரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் வீட்டில் தனித்திருக்க அறிவுறுத்தும் வகையில், ஜேர்மனி அரசாங்கம், 90 வினாடிகள் ஓடும் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுபரவல் காலத்தில், 22 வயது இளைஞர் ஒருவர், வீட்டில் தனித்து இருந்து, நாட்டிற்கு தான் அளித்த சேவை குறித்து, வயதான பின், அவர் கூறும் வகையில், இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
ஜேர்மனியில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுபரவல் அதிகரிக்கும் என நோய்த் தடுப்பு மையமான ரொபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.






