கார்டிஃப் நகரில் உள்ள மதுக்கடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் ஒன்றைத் தொடர்ந்து ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் உள்ளவர்களில் ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது மற்றும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்றும் மேலும் மூன்று பேர் கத்தி குத்து தாக்குதலுக்குள்ளானதாக கருதப்படுகிறது என்றும் சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தோடு காயமடைந்தவர்கள் அனைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வன்முறை சம்பவத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ள பொலிஸார் சம்பவம் தொடர்பாக தெரிந்தால் தம்மை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.






