சொத்துக்குவிப்பு வழக்கில் தற்பொழுது சசிகலா கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்.
சசிகலா ஜனவரி மாதம் 27ஆம் தேதியன்று விடுதலை ஆவார் என்று சொல்லப்பட்டநிலையில் அவர் அபராத தொகை ஆன 10 கோடியே 10 லட்சத்தை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளதால் அவர் விடுதலை உறுதியாகி உள்ளது.
அதன்படி இன்று இரவு 9.30 மணிக்கு மேல் அவர் விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் சசிகலா விடுதலை ஆவது குறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதேவேளை சசிகலா விடுதலை ஆனால் அதிமுக கட்சியில் எந்த மாற்றமும் இருக்காது என்று முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேலையில் சசிகலா விடுதலை ஆவது குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






