19 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவை தடை செய்யப்பட்டது.
இதனால் அமெரிக்காவில் பல்வேறு விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
செலவை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் பல விமான நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அரசு நிதி வழங்கும் பட்சத்தில் இந்த வேலை இழப்பு தவிர்க்கப்படலாம் எனவும் இல்லை எனின் 19 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்க முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.






