பொதுவாக சில பெண்களுக்கு உதட்டிற்கு மேல் பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.
இது பெண்களின் முக அழகையே மோசமாக காட்டும் வகையில் இருக்கும். இதனை மறைப்பதற்கு பல பெண்கள் தற்காலிகமாக அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள்.
ஆனால் இது நிரந்தர தீர்வினை தராது. இதற்கு எளியவழியில் தீர்வு வேண்டுமாயின் ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

- ஒரு எலுமிச்சை துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எலுமிச்சை துண்டால் சர்க்கரையைத் தொட்டு, உதட்டின் மேற்பகுதியில் சிறிது நேரம் மென்மையாக தேய்க்க வேண்டும். 3-5 நிமிடம் செய்வது மிகவும் சிறந்தது. இப்படி தினமும் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கருமையாக இருக்கும் உதட்டின் மேல் பகுதியை வெள்ளையாக்கலாம்.
- ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை நன்கு கலந்து, உதட்டின் மேல் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு குறைந்தது 2-3 முறை செய்து வந்தால், கருமை நீங்கிவிடும்.
- ஒரு பௌலில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த கலவையை இரவில் தூங்கும் முன் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், உதட்டிற்கு மேலே கருமையாக இருப்பதைப் போக்கிவிடலாம்.
- ஒரு பௌலில் கேரட் ஜூஸை எடுத்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி கேரட் ஜூஸை மேல் உதட்டிற்கு மேலே தடவி 20-30 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உதட்டின் மேல் உள்ள கருமை நீங்கிவிடும்.
- தினமும் டூத் பிரஷ் கொண்டு கருமையாக இருக்கும் உதட்டிற்கு மேலே 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தினமும் இப்படி செய்வதால் நல்ல மாற்றம் தெரியும்.






