மழை மற்றும் குளிர் காலத்தில் சருமம், ஈரத்தன்மையை இழந்து சொரசொரப்புத் தன்மை, வறட்சி போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று.
இதனை வீட்டிலிருந்படியே சில பொருட்களை வைத்து சரிசெய்துகொள்ள முடியும்.
தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- மென்மையான மற்றும் மிருதுவான சருமத்திற்கு சிறிது தேனை எடுத்து உங்கள் முகத்தில் சிறிது நேரம் விட்டு விட்டு மசாஜ் செய்யவும். பிறகு மிதமான சூட்டில் உள்ள நீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். தேனுடன் புதிய க்ரீமை கலந்து முக கவசம் போல முகத்தில் தடவலாம்.
- தண்ணீர் மற்றும் ஓட்ஸை கொண்டு ஒரு பேஸ்ட்டை உருவாக்கலாம். அதை கொண்டு சருமத்தை சுத்தம் செய்ய வேண்டும். அல்லது ஓட்ஸில் தேன் அல்லது தயிரை கலந்து சருமத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு சருமம் மென்மையான பிறகு சாதரண தண்ணீரில் முகத்தை கழுவலாம்.
- உங்கள் முகத்தில் மயோனைஸ் தடவினால் சிறிது நேரத்தில் உங்கள் சருமம் மென்மையாகி விடும். அதன் பிறகு 10 நிமிடங்களுக்கு பிறகு சருமத்தை கழுவ வேண்டும். இது வறண்ட சருமத்திற்கு விரைவான தீர்வளிக்கிறது.
- சிறிது பாலை கொண்டு முகத்தில் மசாஜ் செய்து பிறகு சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை கழுவவும். இது வறண்ட சருமத்திற்கு சரியான தீர்வாக பார்க்கப்படுகிறது.
- பாதாமை தூளாக அரைத்து அதை பாலில் கலந்து பேஸ்ட் போல தயார் செய்துக்கொள்ள வேண்டும். அதை உங்கள் முகத்தில் தடவி கொள்ளவும். இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சருமத்தை பளபளப்பாக்கும்.






