உணவில் பயன்படுத்தும் நெய்யை கொண்டு சருமம் போன்று கூந்தலுக்கும் பயன்படுத்தலாம் என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.
ஆனால் உண்மையில் நெய் கூந்தலுக்கு நன்மை செய்கிறது.
நெய் வைட்டமின் ஏ மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் டி மற்றும் முடி உதிர்தலை எதிர்த்து போராட உதவுகிறது.
நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நன்மை தரக்கூடியவையே.
கூந்தலுக்கு நெய் பயன்படுத்துவதற்கு முன்பு எப்படி இதை பயன்படுத்தலாம், என்ன பிரச்சனைகள் நீங்கும் என்பதை பார்க்கலாம்.
- உச்சந்தலையில் ஈரப்பதம் இருந்தாலே முடி உதிர்தலை கட்டுப்படுத்திவிட முடியும்.
- இரண்டு டீஸ்பூன் நெய் எடுத்து உச்சந்தலையில் மசாஜ் செய்துவிடவும்.
- இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடிகளின் மயிர்க்கால்களை வலுப்படுத்துகிறது.
- இதில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் முடியின் ஆரோக்கியத்துக்கு நன்மை செய்யகூடியவை.
- இது முடிக்கு சிறந்த போஷாக்கு அளிப்பதால் முடி உதிர்வதை தடுக்கிறது.
- முடி உதிர்வு குறைந்து வளர்ச்சி மேலும் அதிகரிக்க செய்கிறது. இதை இரவு நேரங்களில் தடவி மசாஜ் செய்து மறுநாள் காலை தலைக்கு குளித்து வந்தால் முடி உதிர்தல் குறையக்கூடும்.






