சட்டவிரோத கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளதுடன் கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட காலத்திற்குரிய அவருடைய சம்பள நிலுவையையும் அவருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (18) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிக்குகள் உள்ளிட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கருத்தடை சத்திர சிகிச்சை உள்ளானதாகக் கூறப்படும் தாய்மார்கள் ஆகியோர் இணைந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சட்டத்தரணிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.






