சேதன பசளை திட்டத்தை முன்னெடுத்து செல்ல ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு காலம் போதாது என்று, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
சேதன பசளை திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்வதற்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. இரசாயன உர பயன்பாட்டினால் மனித உடலல் ஆரோக்கியத்திற்கும் மண் வளத்திற்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து சுகாதார அமைச்சு, சுற்றுலாத்துறை அமைச்சு இதுவரை காலமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
சேதன பசளை திட்ட கொள்கையை செயற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி, போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லை. அனைத்து சவால்களையும் விவசாயத்துறை அமைச்சு எதிர்க்கொள்ள வேண்டியுள்ளது. எனினும், சேதன பசளை திட்டத்தை நிச்சயம் சிறந்த முறையில் செயற்படுத்துவோம்.
பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு காலம் போதாது. சிறுபோகத்துக்கே இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய முடியும்.
சீன உர நிறுவனத்துக்கு 6.7 மில்லியன் நிதி செலுத்தல் தொடர்பில் மாறுபட்ட பல கருத்துக்கள் தற்போது குறிப்பிடப்படுகின்றன.
இலங்கை கோரும் தரத்துக்கு அமைய உரத்தை விநியோகிக்குமாறு குறித்த சீன நிறுவனத்துக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.






