காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் பயன்படுத்தும் கால எல்லையே இதன்படி நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கால பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதி பத்திரங்கள், திகதி அடிப்படையில் மேலும் 3 மாத காலங்களுக்கு பயன்படுத்த முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.






