பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, வைரஸ் தொற்றினால் எட்டு இலட்சத்து 10ஆயிரத்து 467பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 11ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 44ஆயிரத்து 347பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரித்தானியாவில் 21ஆயிரத்து 242பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 199பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள 711பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.






