தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மாயமான 12ஆம் வகுப்பு மாணவிகள் சென்னையில் மீட்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் திடீரென மாயமானதாக பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் பதறிப்போன பெற்றோர்கள், சக மாணவிகளுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் குறித்த மாணவிகள் கிடைக்காததால் பொலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் தேடுதல் பணியில் பொலிசார் துரிதமாக செயல்பட்டனர். மாணவிகளை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் மாயமான மாணவிகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி 12ஆம் வகுப்பு மாணவிகள் மாயம்! 24 மணிநேரத்தில் சென்னையில் மீட்பு | 12th Kallakurchi Girls Rescue After Missing
(Representative image)
உடனடியாக மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தனிப்படை பொலிசார் அங்கு விரைந்தனர். குறித்த மாணவிகள் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்ட பொலிசார், அவர்களுக்கு அறிவுரை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.






