சங்கக்காரா ஒருநாள் போட்டிகளில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் அதிக பேரை ஆட்டமிழக்க செய்த விக்கெட் கீப்பர் (482) என்ற சாதனையை படைத்தவர்
ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு சதங்களை அடித்தவர் என்ற சாதனையை சங்கக்காரா படைத்துள்ளார்
இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரா தனது பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார சங்கக்காரா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சங்கக்காரா பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், ‘உங்கள் அனைவரது வாழ்த்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் எனது நன்றி. எனது நாளை மேலும் சிறப்பானதாக மாற்றிவிட்டீர்கள்’ என தெரிவித்துள்ளார்.






