யாழில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் டி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (09-11-2022) காலை முதல் யாழில் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்துவருகிறது.
இதன்காரணமாக மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஜே/298 மறவன்புலவு, ஜே/339 வரணி வடக்கு, ஜே/145 வடலியடைப்பு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலேயே குறித்த பாதிப்புக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.






