போகம்பர சிறைச்சாலை கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
தமக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு கோரியே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
சிறைக் கைதிகளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்காக குறித்த சிறைச்சாலை ஒதுக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறைச்சாலையில் 800இற்கும் அதிகமான கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் 30 கைதிகள் மற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்து உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் கோரி கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.






