எஸ்-400 ரக வான் ஏவுகணைத் தடுப்பு அமைப்பை திட்டமிட்ட காலத்திற்கு முன்னரே தயாரித்து இந்தியாவிடம் ஒப்படைக்க ரஷ்யா மீண்டும் உறுதியளித்துள்ளது.
ரஷ்யாவின் தளவாட உற்பத்தித் திட்ட அமைப்பின் துணை இயக்குநர் ரோமன் பாபுஸ்கின் (Roman Babushkin) மொஸ்கோவில் காணொளி தொடர்பாடல் மூலம் ஊடகங்களில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய மதிப்பில், சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக வான் ஏவுகணைத் தடுப்பு அமைப்பை வாங்கவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டதுடன் இதற்கு அமெரிக்கா எதிர்ப்பையுடம் வெளியிட்டிருந்தது.






