நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் யசோதா.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கர்ப்பிணி பெண்ணாக சமந்தா நடித்துள்ளார்.
அண்மையில் வெளிவந்த இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ளார்.
சம்பளம்
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சமந்தா ரூ. 2.5 கோடி சம்பளமாக வாங்கி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்போது கமிட்டாகி வரும் படங்களுக்கு ரூ. 4 முதல் ரூ. 5 கோடி வரை சமந்தா சம்பளமாக வாங்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.






