வாரிசு Vs துணிவு
தமிழ் சினிமாவின் தற்போதைய இரண்டு உச்ச நட்சத்திரங்கள் அஜித் மற்றும் விஜய். திரையுலகின் இரண்டு துருவங்களாக உள்ள இவர்கள் திரைப்படங்களுக்கு எப்போதும் எதிர்பார்ப்பு அதிகம்.
அப்படி அவர்களின் அடுத்த திரைப்படங்களான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களை ரசிகர்கள் அனைவரும் பெரியளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அதன்படி இந்த இரண்டு திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த திரைப்படங்களின் ஷூட்டிங்கும் நிறைவடைகிறது. இதில் வாரிசு திரைப்படம் ஏற்கனவே பொங்கலுக்கு வரோம் என அறிவித்துவிட்டனர்.
மேலும் துணிவு திரைப்படம் தற்போது வரையில் ஜனவரி மாதம் வெளியாகிவிடும் தான் சொல்லப்படுகிறது. இடையிலே இவர்களும் பொங்கலுக்கு படத்தை வெளியிடுவதாக அறிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.






