இந் நிலையில் ஹைதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த வலிமை திரைப் பட படப்பிடிப்பில் சண்டைக்காட்சி ஒன்றில் அஜித்தின் கையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்ட அஜித் மீண்டும் படபிடிப்பில் கலந்துகொண்டு அவரது பகுதிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டார்.
இதுகுறித்து படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது இச் சம்பவம் நடந்து 10நாட்களாகி விட்டது எனவும் அஜித் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, அஜித்துக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனாலும், தன்னம்பிக்கையோடு நடித்து வருகிறார்.
இச் செய்தியானது அஜிதின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






