தன்னைப் பற்றி அவதூறாகச் செய்தி பரப்பியதாக யூடியூப் சனல் உரிமையாளரிடம், இந்திய மதிப்பில் 500 கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டு பிரபல பொலிவூட் நடிகர் அக்க்ஷய் குமார் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
எப் எப் நியூஸ் என்ற யூட்யூப் சேனலை நடத்தி வரும் ரஷீத் சித்திக் என்பவர், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்களை வெளியிட்டு, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிவிடுதலையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த நபர் தற்போது சுசாந்தின் தோழி ரியா சக்ரபர்த்தி நாடு விட்டுத் தப்பிச் செல்ல அக்க்ஷய் குமார் உதவியதாக செய்தி வெளியிட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே அக்க்ஷய் குமார் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.






