ஆயுர்வேத சிகிச்சை என ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு நடிகை அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தெரிவுசெய்து நடித்து வந்த அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
இஞ்சி இடுப்பழகி திரைப்படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் பெருமளவில் சிரமப்பட்டார்.
அதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. அதனைத் தொடர்ந்து ஆயுர்வேத சிகிச்சை என ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்துள்ளார்.






