முல்லைத்தீவு மாவட்டத்தின், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவில், இன்று, எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
வீடொன்றில், இன்று காலை 11.00 மணியளவில், இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
சமையல் செய்து கொண்டிருந்த வேளையிலேயே, வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், அருகில் யாரும் இல்லாத நிலையில், பாதிப்பு ஏற்படவில்லை.
நாடளாவிய ரீதியில் பல்வேறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகிய முதலாவது சம்பவம் இதுவாகும்.
இந்த சம்பவம், முல்லைத்தீவு மக்கள் மத்தியில், மிகவும் அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது.






