டொலர் இன்மையால் ஏற்பட்ட இறக்குமதி நெருக்கடி காரணமாக, நாட்டில் பாரிய அளவில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.
இன்று, நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி காரணமாக, அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய, ஆயிரத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் விடுவிக்கப்படாது தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இவற்றை விடுவிக்க, இறக்குமதியாளர்களுக்கு, வங்கிகளில் டொலர்களை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு, உராய்வு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாத நிலைமைக்கு, கையிருப்பு இன்மையே காரணமாகும்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படவும், இதுவே காரணமாகும்.
என குறிப்பிட்டுள்ளார்.






