நாடளாவிய ரீதியில், இன்று (18) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், எரிவாயு வெடிப்பு தொடர்பிலான 22 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 7 நாட்களுக்குள் 792 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் இந்த வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் 90 சம்பவங்கள் எரிவாயு அடுப்பில் ஏற்பட்ட சேதங்கள் என்றும் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.






