மட்டக்குளி, முகத்துவாரம், ப்ளுமென்டல், வெள்ளம்பிட்டி மற்றும் கிரேண்பாஸ் ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 26ம் திகதி அதிகாலை 5 மணிவரை தொடரும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பின் சில பகுதிகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு!
கொழும்பின் சில பகுதிகளில் பொலிஸ் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
மட்டக்குளி, புளுமெண்டல், கிரேண்பாஸ், மோதர மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.






