ஊரடங்கு அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வது குறித்து செயற்பாடுகளுக்காக விசேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, களணி பொலிஸ் பிரிவுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி MKRA குணரத்னவை 071 859 16 05 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமும், கம்பஹா பொலிஸ் பிரிவுகள் தொடர்பில் உதவி பொலிஸ் அதிகாரி துசிதகுமாரவை 071 859 16 10 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமும் தொடர்பு கொள்ள முடியும் என தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு தொடர்பில் பொலிஸ் அதிகாரி பாலித அமரதுங்கவை 071 859 16 32 மற்றும் கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவு தொடர்பில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிரஞ்சன் அபேவர்தன 071 859 15 74 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமும் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய சேவைகளான மருத்துவம், மின்சாரம், நீர், தொடர்பாடல் மற்றும் ஊடகம் ஆகிய துறைகளுக்கு தமது சேவை அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பாயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.






