இலங்கையில் இரண்டு திருமண விழாக்களின் போதே கொரோனா அலை மீண்டும் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, பொது விழாக்களை ஏற்பாடு செய்யவோ அதில் பங்கேற்கவோ கூடாது என்று கூறப்பட்டவை எல்லோரும் அறிந்த விடயமே.
இதேவேளை எதிர்காலம் மிகவும் முக்கியமானது என்று கூறியதுடன், பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படவும், அடிக்கடி வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மக்கள் தற்போதைய நிலைமையைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






