பேலியகொட மீன் சந்தையிலிருந்து 863 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொரோனா நோயாளிகள் சிலருடன் தொடர்பு வைத்திருந்ததாக சுகாதார அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதன்படி தியத்தலாவ தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 180 பேரும் குண்டசாலை தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 150 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மட்டக்களப்பு பல்கலைக்கழக தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 192 பேரும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 146 பேரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம், எஸ்.எல்.ஏ.எப். பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 85பேரும் பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு 110 பேரும் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தகவல் தெரிவித்தார்.






