2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது.
இவ்வாறு வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை கல்வி வலயத்தில் மாணவரொருவர் 9A சித்திகளை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதன்படி மொனராகலை விபுலானந்தா தேசிய பாடசாலையின் மாணவன் யோகேஸ்வரன் திவான் என்பவரே இந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் மொனராகலை கல்வி வலயத்தில் வரலாற்றின் முதல் தடவையாக 9A சித்திகளை பெற்ற மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.






