ஐபிஎல் 2022-ம் ஆண்டு போட்டிக்கள் வரும் மார்ச் நான்காம் வாரத்தில் தொடங்க உள்ளது.
மார்ச் 26-ம் தேதி தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளன.
15-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது.மார்ச் 26-ம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.
இதனிடையே பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகிய நிலையில் புதிய கேப்டன் யார், என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார் என்பதை அணி நிர்வாகம் மார்ச் 12-ம் தேதி அறிவிக்கிறது.
இந்நிலையில் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் குறித்த அப்டேட்டை புதிய வீடியோ மூலம் வெளியிடப்பட்டுள்ளது அணி நிர்வாகம்.






